'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விண்ணைத்தாண்டி வருவாயா', 'அச்சம் என்பது மடமையடா' படங்களை தொடர்ந்து சிம்புவை மூன்றாவது முறையாக வெந்து தணிந்தது காடு படத்தின் மூலம் இயக்குகிறார் கவுதம் மேனன். குஜராத்தி நடிகை சித்தி இட்னானி இந்த படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். சிம்புவின் அம்மாவாக ராதிகா நடித்துள்ளார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். இப்படம் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக இருக்கிறது .
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பிரமாண்ட இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் யூனிவர்சிடியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய இயக்குனர் கவுதம் மேனன் இப்படம் 3 மணி நேரத்திற்கு மேல் திரையரங்குகளில் திரையிடப்பட இருக்கிறது என்றார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .