தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை | பிளாக்பஸ்டர் படம் எடுக்க வேண்டும் என்ற அழுத்தம் இல்லை : லிஜோ ஜோஸ் பெல்லிசேரி | தஞ்சை பெரிய கோவிலை பார்த்து வியந்த ஹாலிவுட் நடிகர் | திரைப்பட எழுத்தாளர் வேலுமணி காலமானார் | ஏழைகளுக்கும் போட் விடுங்கள் : அஜித்தின் உதவியை விமர்சித்த போஸ் வெங்கட் |
காமெடி கதைக்களங்களில் நடித்து வரும் நடிகர் மிர்ச்சி சிவா தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காசேதான் கடவுளடா'. பழம்பெரும் நடிகர் முத்துராமன் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற நகைச்சுவை படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி உள்ளது. ஆர்.கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகியாக ப்ரியா ஆனந்த் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, கருணாகரன், ஊர்வசி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதிக்கப்பட்ட தயாரிப்பு பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் வருகின்ற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது.