'விஜய் 67' காஷ்மீர் சென்ற த்ரிஷா, பிரியா ஆனந்த் | தெலுங்கில் நஷ்டத்திலிருந்து தப்பிக்கும் 'வாரிசு' | பாலிவுட்டில் புதிய சாதனை படைத்துள்ள ஷாரூக்கான் | தலைக்கூத்தல் மூலம் தமிழுக்கு வரும் பெங்காலி நடிகை | வறுமையில் வாடும் இயக்குனர் ‛குடிசை' ஜெயபாரதி | ஹாலிவுட் நடிகை புற்றுநோய்க்கு பலி | தமிழுக்கு ஹீரோவாக வரும் தெலுங்கு காமெடி நடிகர் | விமரிசையாக நடந்த பூர்ணாவின் வளைகாப்பு | படித்த கல்லூரிக்கு விசிட் அடித்த மம்முட்டி | சாஹோ டைரக்டருடன் கைகோர்த்த பவன் கல்யாண் |
நடிகர் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது அந்தகன் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இதுதவிர மேலும் சில படங்களில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இலங்கையை சேர்ந்த பெண்ணான குமுதினி என்பவர் தற்போது சுவிட்சர்லாந்து விமான நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்த குமுதினி, பாண்டி பஜார் காவல் நிலையத்தில் நடிகர் பிரசாத் மீது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் நடிகர் பிரசாந்த், தன்னிடம் 10 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் பிரசாந்த் தரப்பில் இருந்து குமுதினிக்கு மூன்று முறை பிரச்சனை செய்ததாகவும் கூறியுள்ளார்.
இந்த புகார்கள் குறித்து காவல் துறையினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நடிகர் பிரசாந்த்தும் அந்த பெண் மீது எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். அதில் தனது பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிப்பதாக தெரிவித்துள்ளார். இதனிடையே இரண்டு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.