பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் |
கிரிக்கெட் வீரர்களையும், சினிமாவையும் பிரிக்க முடியாது என்று சொல்வார்கள். பல கிரிக்கெட் வீரர்கள் சினிமா பிரபலங்களைத் திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். அதனால்தான் அப்படி ஒரு பேச்சு கடந்த பல வருடங்களாக இருந்து வருகிறது.
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் போது வீரர்கள் பலரும் விளம்பரப் படங்களில் நடிப்பார்கள். அதன் மூலம் பல கோடிகளை சம்பாதிப்பார்கள். அவர்கள் ஓய்வு பெற்ற பிறகு அந்த விளம்பரங்கள் அடுத்து பிரபலமாகும் வீரரருக்குச் சென்றுவிடும். ஓய்வு பெற்ற வீரர்களில் சிலர் வர்ணனையாளராக மாறிவிடுவார்கள்.
ஆனால், இந்திய கிரிக்கெட் அணியில் ஆல் ரவுண்டராக தடம் பதித்த இர்பான் பதான் ஓய்வுக்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்தார், அதுவும் தமிழ் சினிமாவில். விக்ரம் கதாநாயகனாக நடித்து நேற்று வெளிவந்த 'கோப்ரா' படத்தில் இன்டர்போல் ஆபீசராக நடித்துள்ளார். அவர் நடித்த முதல் படம் போல இது தெரியவில்லை என பலரும் அவருடைய நடிப்பைப் பாராட்டி வருகிறார்கள்.
இர்பான் பதானின் சகோதரரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான அதிரடி ஆட்டக்காரர் யூசுப் பதான் தனது தம்பி இர்பானின் சினிமா அறிமுகம் குறித்து, “எனக்கும் இன்டர்போல் ஆபீசர் போல உணர்வு ஏற்படுகிறது. அற்புதமான கிரிக்கெட்டர், நடிகர், டான்சர், சகோதரர், மகன், தந்தை, வழிகாட்டி….இர்பான்…நீ உண்மையில் ஒரு 'ஆல் ரவுண்டர்',” எனப் பாராட்டியுள்ளார்.