‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி |

யா யா, பக்ரீத் படங்களை தயாரித்த எம்.எஸ்.முருகராஜ் அடுத்து தயாரிக்கும் படம் சிக்னேச்சர். இதில் நட்டி நட்ராஜூம், ஜீவனும் இணைந்து நடிக்கிறார்கள். இவர்களுடன் இளவரசு, ஹரிஷ் பெரடி, மன்சூர் அலிகான், ஜார்ஜ், மாறன் மற்றும் பலர் நடிக்கின்றனர். கதாநாயகி தேர்வு நடைபெற்று வருகிறது. பக்ரீத் படத்தை இயக்கிய ஜெகதீசன் சுபு இயக்குகிறார். சீனிவாசன் தயாநிதி ஒளிப்பதிவு செய்கிறார்.
படம் பற்றி இயக்குனர் ஜெகதீசன் சுபு கூறியதாவது : நாம் போடுகிற ஒவ்வொரு கையெழுத்தும் எவ்வளவு முக்கியமானது. அதை பயன்படுத்தி, அவங்க தலையெழுத்துல தாளம் போடுறது தான் இந்த படத்தின் கதை. சாமானிய மக்களோடு பழகி அவங்க ரகசிய டேட்டாவை திருடும் கேரக்டரில் ஜீவன் நடிக்கிறார். அதே டேட்டாவை பயன்படுத்தி மக்களை வேட்டையாடுபவராக நட்டி நடிக்கிறார். இவர்கள் இணைந்து செய்யும் 'சீட்டிங்' தான் படத்தின் திரைக்கதை சுவாரசியம். ஒரே கட்ட படபிடிப்பாக சென்னை, மும்பை மற்றும் துபாய் போன்ற பல இடங்களில் நடைபெறுகிறது.