கோலிவுட்டில் அதிரடிக்கு தயாராகும் பீஸ்ட் நடிகை | கூடைப்பந்து வீராங்கனை டூ நடிகை: பன்முகத்திறனுடன் வைஷாலி | ஹாலிவுட் ரேஸ் படங்களில் நடிக்க விரும்பும் அஜித்குமார் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா நாயகன் வில்லனாக மிரட்டிய “நூறாவது நாள்” | நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் |
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் நாளை (ஆக.,31) வெளியாக இருக்கிறது. இதையொட்டி கடந்த இரண்டு வார காலமாக இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்காக சென்னை, ஐதராபாத் மதுரை, திருச்சி, கோவை மற்றும் கேரளா என மாறிமாறி பறந்து வருகிறார் விக்ரம். படத்தின் கதாநாயகிகளான ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தன் ஆகியோரும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் கேரளாவில் நடைபெற்றது. அதேசமயம் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை மியா ஜார்ஜ் மற்றும் மலையாள நடிகர் ரோஷன் மேத்யூ இருவரும் கேரளாவில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் மியா தனது கணவர் மற்றும் குழந்தை ஆகியோர் உடன் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்த சமயத்தில் நான் சிங்கிளாக இருந்தேன். கொரோனா முதல் அலை தாக்கம் காரணமாக அடுத்து இடைவெளிவிட்டு மீண்டும் படப்பிடிப்பு துவங்கியபோது நான் திருமணம் செய்து இருந்தேன். அடுத்து மீண்டும் இடைவெளி விட்டு படப்பிடிப்பு துவங்கியபோது நான் ஐந்து மாத கர்ப்பமாக இருந்தேன்” என்று காமெடியாக பேச ஆரம்பித்தார்.
கீழே பார்வையாளர் வரிசையில் அமர்ந்து இதை கேட்டுக்கொண்டிருந்த விக்ரம், உடனே, “இதோ இப்போது படம் ரிலீசாகும் வேளையில் கொச்சு பேபியும் கூட வந்துவிட்டது” என்று கூறியதும் மியா முகத்தில் அவ்வளவு சந்தோஷம். உடனே தனது அருகில் இருந்த மியாவின் கணவரிடம் இருந்த அந்த குழந்தையை தூக்கிக்கொண்டு மேடைக்கு ஏறிய விக்ரம், “இதுதான் கோப்ரா பேபி” என்று கூறியதும் பார்வையாளர்களிடம் சிரிப்பலை எழுந்தது.
விக்ரம் தனது குழந்தையை தூக்கிக்கொண்டு மேடை ஏறுவார் என எதிர்பார்த்திராத மியா ஜார்ஜ் ஆனந்த அதிர்ச்சிக்கு ஆளாகி, தனது கணவரையும் மேடைக்கு அழைத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், இது என் வாழ்க்கையின் முக்கியமான தருணம் என்று சந்தோஷத்துடன் குறிப்பிட்டார்.