டிரெயின்-ல் ஸ்ருதிஹாசன் பாடிய கன்னக்குழிக்காரா | ரஜினிக்காக மட்டுமே அதை செய்தேன் : சொல்கிறார் உபேந்திரா | மறு தணிக்கைக்கு செல்லும் பராசக்தி | வருட இறுதியில் ஓடிடியில் மகிழ்விக்க வரிசைக்கட்டும் 'புதுப்படங்கள்'..! | குரு சோமசுந்தரம், அனுமோல் இணைந்து நடிக்கும் பாரிஸ் கபே | ஜனநாயகன் படத்தை தெலுங்கில் வெளியிடும் பிரபல நிறுவனம் | ‛ஆசாத் பாரத்' பற்றி நெகிழும் இந்திரா திவாரி | ஜெயிலர் 2 படத்தில் ஷாருக்கான் : உறுதிசெய்த பாலிவுட் நடிகர் | விஜய்யின் வளர்ச்சியை தடுக்க நினைக்கின்றனர் : நடிகை மல்லிகா | இம்மார்ட்டல் படத்தின் டீசர் எப்படி இருக்கு |

மலையாளத்தில் நடிகர் நடிகர் திலீப் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வாய்ஸ் ஆப் சத்தியநாதன். இந்த படத்தை பிரபல கமர்சியல் இயக்குனர் ரபி இயக்கி வருகிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜோஜூ ஜார்ஜ், அனுபம் கெர் மற்றும் வில்லனாக ஜெகபதிபாபு ஆகியோர் நடித்து வருகின்றனர். கடந்த வருடமே துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு இடையில் நிறுத்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது கோல்கட்டாவில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் இந்த படத்தின் கதை பஹத் பாசிலுக்காகத்தான் முதலில் உருவாக்கப்பட்டது. இன்னும் சொல்லப்போனால் இந்த படத்தின் ஒன்லைனை இயக்குனர் ரபியிடம் கொடுத்து டெவலப் பண்ண சொன்னதே பஹத் பாசில் தானாம். ஆனால் முழு ஸ்கிரிப்ட்டையும் தயார் செய்து முடித்ததும், பஹத் பாசில் இந்த கதையை கேட்டுவிட்டு இது நான் நடிக்க வேண்டிய படமே அல்ல.. என்னை விட கமர்ஷியலான நடிகர் ஒருவர் நடித்தால் தான் சரியாக இருக்கும் என்று கூறி ஒதுங்கி விட்டாராம். அந்த சமயத்தில் தான், ரபியிடம் நாம் இணைந்து படம் பண்ணலாம், கதை இருக்கிறதா என்று நடிகர் திலீப் கேட்டுள்ளார். ரபி இந்த கதையை சொன்னதுமே திலீப்புக்கு உடனே பிடித்து போய்விட, அப்படி துவங்கியதுதான் இந்த வாய்ஸ் ஆப் சத்தியநாதன் படம்” என்கிற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.