ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் விஜய் தேவரகொண்டா குறிப்பிடத்தக்கவர். இவர் நடித்த அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட பல படங்கள் வெற்றி பெற்றதால் தற்போது அவரை வைத்து பிரமாண்ட பட்ஜெட்டுகளில் படம் தயாரிக்கிறார்கள். அந்த வகையில் பூரி ஜெகநாத் இயக்கத்தில் தற்போது விஜய் தேவரகொண்டா நடித்துள்ள படம் லைகர். அவருக்கு ஜோடியாக அனன்யா பாண்டே நடித்துள்ள இந்த படத்தில் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் இன்று(ஆக.,25) வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் தற்போது தெலுங்கு சினிமாவில் படத்துக்கு படம் விஜய் தேவர கொண்டா தனது சம்பளத்தை உயர்த்தி வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதாவது ஆரம்பத்தில் 5 கோடி, 10 கோடி என்று சம்பளம் வாங்கி வந்த விஜய் தேவரகொண்டா தற்போது நடித்துள்ள லைகர் படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம். இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றால் புதிய படங்களில் நடிக்க பன்மடங்கு சம்பளத்தை உயர்த்துவதற்கும் அவர் திட்டமிட்டுள்ளாராம். அதன் காரணமாகவே புதிய படங்களில் இன்னும் கமிட்டாகாமல் உள்ளதாக டோலிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளன.




