டியூட் விவாதங்களை உருவாக்கி உள்ளது, ஆனால்... : பிரதீப் ரங்கநாதன் | தீபாவளி கொண்டாடிய ரவி மோகன், ஜி.வி .பிரகாஷ், யோகி பாபு, பாடகி கெனிஷா! | காதல் தோல்வியால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்!- சொல்கிறார் ராஷ்மிகா | ஹீரோயின் இல்லாமல் தேங்கி நிற்கும் கவின் படம்! | ‛டாடா' இயக்குனருடன் கைகோர்க்கும் துருவ் விக்ரம் | கார்த்திக் சுப்பராஜ் அடுத்த படம் குறித்து அப்டேட் இதோ! | முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் |
மலையாள திரையுலகின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் ரபி (மெக்கார்டின்). தமிழில் சரத்குமார் நடித்த தென்காசி பட்டணம் படத்தை இயக்கியவர் இவர் தான். திலீப் - கீர்த்தி சுரேஷ் நடித்த ரிங் மாஸ்டர் மற்றும் 2 கண்ட்ரீஸ் படங்களை தொடர்ந்து திலீப்பை வைத்து மீண்டும் 'வாய்ஸ் ஆப் சத்தியநாதன்' என்கிற படத்தை இயக்குகிறார் ரபி.. இதில் திலீப்புக்கு ஜோடியாக வீணா நந்தகுமார் நடிக்கிறார். கடந்த வருடம் அக்டோபர் மாதமே இந்த படத்தின் படப்பிப்பிடிப்பு துவங்கியது.. முதற்கட்ட படப்பிடிப்புக்கு பிறகு கொரோனா மூன்றாவது அலை துவக்கம், திலீப் மீதான வழக்கு விசாரணை என சில காரணங்களால் இந்தப்படம் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது மீண்டும் இந்தபடத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கோல்கட்டாவில் இதன் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் இந்தப்படத்தில் வில்லனாக நடிகர் ஜெகபதிபாபு இணைந்து நடித்து வருகிறார். ஏற்கனவே மலையாளத்தில் மோகன்லாலுடன் புலிமுருகன், மம்முட்டியுடன் மதுரராஜா ஆகிய படங்களில் வில்லனாக ஜெகபதிபாபு நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.