புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ் சினிமாவில் சென்னை, மதுரை, கோவை, நெல்லை என தமிழ்நாட்டில் நம்ம ஊர் ஹீரோக்கள் பல பாஷைகளில் பேசுவதைப்போல மலையாள சினிமாவிலும் கோழிக்கோடு, திருவனந்தபுரம், காஞ்சிரப்பள்ளி, பாலக்காடு, திருச்சூர், கண்ணூர் ஆகிய பகுதிகளில் புழக்கத்தில் இருக்கும் பாஷைகள் பிரபலமானவை தான். கேட்பதற்கும் கூட அவை வித்தியாசமாக இருக்கும். அந்த வகையில் நடிகர் பிரித்திவிராஜ் தற்போது ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் தான் நடித்துள்ள காப்பா என்கிற படத்தில் முதன்முறையாக திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்துள்ளார். இதில் ஆச்சரியம் என்னவென்றால் பிரித்விராஜ் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருவனந்தபுரத்தில் தான் என்றாலும் சினிமாவுக்காக கொச்சியில் செட்டில் ஆகிவிட்டார்.
சமீபத்தில் திருவனந்தபுரம் மார்க்கெட் பகுதியில் கட்டப்பட்ட மிக நீண்ட நடை மேம்பாலம் ஒன்றின் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள நடிகர் பிரித்விராஜூக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது இந்த நிகழ்வில் பேசிய பிரித்விராஜ், கல்லூரியில் தான் படித்தபோது, இதே மார்க்கெட் வீதிகளில், பலமுறை பைக்கில் ஓவர் ஸ்பீடாக சென்றதாகவும் அப்போது போலீசாரிடம் சிக்கி அவர்களின் கண்டிப்புக்கு ஆளானதாகவும் தனது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மேலும் திருவனந்தபுரம் தனது சொந்த ஊர் என்றாலும் இதுவரை எந்த ஒரு படத்திலும் திருவனந்தபுரம் பாஷை பேசி நடித்ததில்லை என்றும் தற்போது தான் நடித்து வரும் காப்பா என்கிற படத்தில் தனது சொந்த ஊர் பாஷையை பேசி நடித்து இருப்பதாகவும் கூறியுள்ளார் பிரித்விராஜ்.