தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் | இந்த வாரம் அப்பா, மகள் ; குரு, சிஷ்யன் படங்கள் மோதல் | லவ் மேரேஜ் படம் ஹிட்டா? : கணக்கு சொல்லாத படக்குழு | '96' இரண்டாம் பாகம் : விலக முடிவெடுத்த விஜய் சேதுபதி? |
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் 61வது படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தைத் தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. விசாகப்பட்டினத்தில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு தொடர்ச்சி மலையை ஒட்டி அமைந்துள்ள அரக்கு என்ற பள்ளத்தாக்கு பகுதியில் இப்படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறும் பைக் சேஸிங் சண்டை காட்சியை படமாக்க போகிறார் எச்.வினோத். ஒரு வாரம் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த பைக் சேஸிங் சண்டை காட்சியை ஏராளமான கேமராக்களை வைத்து பல கோணங்களில் படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அந்த வகையில் வலிமை படத்தில் இடம்பெற்றதை விடவும் இந்த பைக் சேஸிங் காட்சி பிரமாண்டமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.