டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள படம் கோப்ரா. அவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ள இந்த படத்தில் இர்பான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ரோபோ சங்கர், மிருணாளினி ரவி உட்பட பலர் நடித்துள்ளனர். ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 31ஆம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் கோப்ரா படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளார்கள். மேலும் இப்படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் கோப்ரா படம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.




