டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

விருமன் படத்தில் அறிமுகம் ஆகியுள்ள அதிதி ஷங்கர் அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடிக்கிறார். மேலும் விருமனில் கிராமத்து பெண்ணாக நடித்தவர், மாவீரன் படத்தில் மாடர்ன் ரோலில் நடிக்கப் போகிறார். இந்த நிலையில் தொடர்ந்து மீடியாக்களுக்கு பேட்டி அளித்து வரும் அதிதி ஷங்கர், தமிழ் சினிமாவில் சூர்யா, சமந்தா ஆகிய இருவரும் எனக்கு மிகவும் பிடித்த கலைஞர்கள் . சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்த படத்தில் அறிமுகமான நான் விரைவில் அவருடனும் நடிப்பேன் என்று தெரிவித்திருந்தார். அதையடுத்து அவர் அளித்துள்ள இன்னொரு பேட்டியில், விஜய் எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கூறி இருப்பவர், அவருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் . முக்கியமாக அவர் மிகச் சிறப்பாக நடனமாடுவார். அதனால் அவருடன் சேர்ந்து நடனம் ஆட வேண்டும் என்ற ஆசை எனக்கு அதிகமாக உள்ளது என்றும் தெரிவித்திருக்கிறார் அதிதி ஷங்கர்.




