'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தமிழ் சினிமாவில் 'சித்து +2' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் ஆக்டிவாக நடித்து வரும் சாந்தினிக்கு பெரிய அளவில் மார்க்கெட் இல்லாததால் சின்னத்திரை பக்கம் கரை ஒதுங்கினார். நடிகைகள் பெரும்பாலும் திருமணத்திற்கு பின் கவர்ச்சிக்கு மூட்டை கட்டி வைத்துவிட்டு திரையுலகை விட்டு விலகிவிடுவார்கள். ஆனால், நடன இயக்குநர் நந்தா மாஸ்டரை திருமணம் செய்து கொண்ட சாந்தினி, அதன்பிறகு தான் கவர்ச்சிக்கு கதவை திறந்துவிட்டிருக்கிறார்.
சமீபகாலங்களில் இவரது புகைப்படங்கள் இளைஞர்களை வசியம் செய்து கட்டிப்போட்டு வருகிறது. அந்த அளவிற்கு கிளாமர் காட்டி வரும் சாந்தினி தற்போது கடற்கரையில் அழகு தவளும் மேனியுடன் ஹாட்டாக போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதில் சாந்தினியின் மூச்சு முட்ட வைக்கும் அழகு ரசிகர்கள் பலரையும் திக்குமுக்காட செய்து வைரலாகி வருகிறது.
விஜய் டிவியின் தாழம்பூ தொடரின் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்த சாந்தினி தற்போது ஜீ தமிழின் ரெட்டை ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.