மனைவியுடன் இணைந்து நடிப்பேன் : ஆதி | தயாரிப்பாளர்களுக்கு அடுக்குமாடி கட்டிடம் : அரசாணை புதுப்பிப்பு | கபில் சர்மா சம்பளம் 5 கோடி? | சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை: ஷங்கரின் விளக்கம் என்ன? | டிக்கெட் கட்டணம், இரட்டை வரி விதிப்பில் மாற்றம் வருமா? | தியேட்டரில் வெளியாகும் அனுஷ்காவின் 'காதி' டிரைலர் | சவுரவ் கங்குலி பயோபிக் படத்தில் ராஜ்குமார் ராவ் | ஏ.ஆர்.ரஹ்மானின் ஆதரவுக்கு நன்றி தெரிவித்த சாய்ரா பானு! | மூன்று நாட்கள் மவுன விரதம் கடைபிடித்த சமந்தா! | 'டிராகன்' - பெயருக்காக எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா….. |
சின்னத்திரை மற்றும் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சாந்தினி தமிழரசன் தனது திருமண வாழ்க்கை குறித்தும் தனது கேரியர் குறித்தும் பேசியிருக்கிறார். 'பயர்' படத்தின் புரமோஷனின் போது அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'எங்களுக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது. அதற்கு ஒன்றரை வருடம் முன்னதாகவே திருமணம் குறித்து எல்லாவற்றையும் பேசி வைத்திருந்தோம். அந்த நேரத்தில் தான் நான் நடித்த படங்கள் ரிலீஸானது. ஒருவேளை அதற்கு முன் ரிலீஸாகியிருந்தால் நான் சினிமாவில் அடுத்தக்கட்டத்திற்கு போவது பற்றி யோசித்திருப்பேன். திருமணத்தால் என்னுடைய கேரியர் பாதிக்கும் என்று நினைத்தேன். அதனால் எங்களது திருமணத்தை இன்செக்யூராக தான் பார்த்தேன். ஆனாலும் என்னுடைய திருமணத்தை நான் எஞ்சாய் செய்தேன்.
நந்தாவும் என் கேரியருக்கு ரொம்ப சப்போர்ட் பண்ணுவார். இன்ஸ்டாகிராமில் கிளாமராக போட்டோஷூட் நடத்துவேன். அதற்கெல்லாம் நந்தா கோபப்பட்டதே கிடையாது. நான் நடித்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. அது எனக்கு வருத்தமாகவே இருக்கிறது. என்னதான் நான் திறமையை காட்ட நினைத்தாலும் அதற்கான சரியான வாய்ப்புகள் கிடைப்பதில்லை' என அந்த பேட்டியில் சாந்தினி பேசியுள்ளார்.