'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சென்னை : டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் சாமானிய போட்டியாளர்களுடன் ஜோடி போடப்போகும் 12 பிரபலங்கள் யார் என்பது பிரபுதேவா முன்னணியில் தெரிய வர உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ டான்ஸ் ஜோடி டான்ஸ். சாமானியர்களை சாதனையாளராக்கும் நிகழ்ச்சியாக இது இருந்து வருகிறது. மற்ற நடன நிகழ்ச்சி போல் இல்லாமல் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் 12 சாமானிய போட்டியாளர்கள் 12 திரைப்பிரபலங்களுடன் ஜோடி சேர்ந்து நடனமாடுவது இந்த நிகழ்ச்சியில் ஸ்பெஷாலிட்டி என்று சொல்லலாம்.
இந்த நிகழ்ச்சியின் புதிய சீசன் சமீபத்தில் தொடங்கியது. கிகி, விஜய் உள்ளிட்டோர் தொகுத்து வழங்க பாபா பாஸ்கர் மாஸ்டர், சினேகா, சங்கீதா உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்றுள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 12 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து அவர்கள் எந்த பிரபலத்துடன் ஜோடி போட்டு நடனமாட போகிறார்கள் என இந்த வாரம் தெரிய வர உள்ளது. இந்த நிலையில் நிகழ்ச்சியில் மேலும் சிறப்பாக்க நடனபுயல் பிரபுதேவா சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் அவர் போட்டியாளர்களுடன் சேர்ந்து நடனமாடி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வாரம் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். போட்டியாளர்களோடு ஜோடி சேர்ந்து நடனமாட உள்ள அந்த 12 பிரபலங்கள் யார் என்ற கேள்வி நிகழ்ச்சி மீதான ஆர்வத்தை உச்சத்துக்கு கொண்டு சென்றுள்ளது.