ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் | அருண் விஜய் படத்திற்கு பாடல் பாடிய தனுஷ் | அமெரிக்காவில் ஏப்., 9ல் குட் பேட் அக்லி பிரீமியர் காட்சி | முதல் கடார் என் சினிமாவை மூடியது... இண்டாவது கடார் திறந்து வைத்தது : சன்னி தியோல் |
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருமகளும், உதயநிதியின் மனைவியுமான கிருத்திகா, ‛‛வணக்கம் சென்னை, காளி'' படங்களுக்கு பிறகு இயக்கியுள்ள வெப்தொடர் ‛பேப்பர் ராக்கெட்'. காளிதாஸ் ஜெயராம், தான்யா ரவிச்சந்திரன், நிர்மல் பழனி, கருணாகரன், கவுரி கிஷன், காளி வெங்கட், பூர்ணிமா பாக்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண் குமார், சைமன் கே.கிங், வேத்சங்கர் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.
இதன் பாடல் மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா நடந்தது. உதயநிதி ஸ்டாலின், சிம்பு, விஜய் ஆண்டனி, மிர்ச்சி சிவா, மிஷ்கின், மாரி செல்வராஜ், பாலாஜி தரணீதரன் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதில் கிருத்திகா பேசியதாவது: ‛‛இது ஒரு பயணக் கதை, இயற்கை எழில் சூழ்ந்த 5 லொக்கேஷன்களில் படப்பிடிப்பு நடத்தி உள்ளோம். கிரைம் த்ரில்லர்களையே ஓடிடி தளங்கள் விரும்பும் காலத்தில் ஜீ5 நிறுவனம் இந்த தொடரை வாங்கி இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. நடித்த அனைருமே முன்னணி நட்சத்திரங்கள், கதை பிடித்தோ, அல்லது எனக்காகவோ நடிக்க ஒப்புக் கொண்டு நடித்துக் கொடுத்தார்கள்.
சிம்பு சிறப்பு விருந்தினராக வந்துள்ளார். அவருடன் ஒரு படத்தில் பணியாற்ற ஆசை இருக்கிறது. அதற்கான தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமையலாம். நான் சினிமாவுக்கு வருவதற்கு எனது குடும்பத்தினர் அனுமதி அளித்தனர். என் கணவர் அனுமதி வழங்கி, தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார். இவள் வீட்டுக்குள் இருந்தால் தொல்லை என்று வெளியில் அனுப்பினாரா என்று தெரியவில்லை.
பெண்கள் சில விஷயத்தை முன்னெடுக்கும்போது குடும்பத்தில் உள்ளவர்கள் அதை நாமே செய்து விடுவோம் என்று பெண்களை தடுப்பது எதனால் என்று தெரியவில்லை. குடும்பத்திலுள்ள பெண்களுக்கு அவர்கள் செய்ய நினைக்கும் காரியங்களுக்கு அனுமதியும், சுதந்திரமும் அளித்தால், அவர்கள் பேப்பர் ராக்கெட்டை விட உயரமாக பறப்பார்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.