‛டாடா' இயக்குனர் இயக்கத்தில் ஜெயம் ரவி | ''இது எனது கனவு'': 'குட் பேட் அக்லி' படத்தில் அஜித்துடன் இணைந்த பிரசன்னா நெகிழ்ச்சி | 'விஜய் 69' படத்தில் பிரியாமணி, நரைன்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | மேடை சரிந்து விபத்து: காயமடைந்த பிரியங்கா மோகன் | ரஜினியின் ‛வேட்டையன்' படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு | யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையையும் விமர்சிக்காதீர்கள் : நடிகர் நெப்போலியன் உருக்கமான வேண்டுகோள் | ஆவண படம் இயக்கி விருது பெற்ற சூர்யா- ஜோதிகாவின் மகள் தியா | வடிவேலுவின் வெற்றிக்கு பின்னால் நான்தான் இருந்தேன்: சிங்கமுத்து பதில் மனு | திரு இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராகும் புதிய படம் | அமரன் படத்தின் முதல் பாடல் நாளை(அக்., 4) வெளியாகிறது |
விஷால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் லத்தி. அறிமுக இயக்குனர் ஆனந்தன் இயக்கியுள்ள இந்த படத்தில் விஷால் போலீஸ் கான்ஸ்டபிள் நடித்துள்ளார். இந்த படத்தில் அதிரடி சண்டை காட்சிகளில் நடித்தபோது உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டு இரண்டு முறை படப்பிடிப்பை தள்ளிவைக்கும் சூழல் உருவானது. மேலும் விஷால் கேரளாவுக்கு சென்று மூலிகை சிகிச்சை மேற்கொண்டு திரும்பினார். இந்த நிலையில் படப்பிடிப்பு முடிவடைந்து செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் நேற்று மாலை இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
சமர் படத்தை தொடர்ந்து ஒன்பது வருடங்களுக்கு பிறகு விஷாலுடன் இந்த படத்தில் மீண்டும் இணைந்து நடித்துள்ள நடிகை சுனைனா இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்தில் இருந்து சென்னை வந்துள்ளார். அப்போது அதே விமானத்தில் சுனைனாவில் இருக்கை இருக்கும் அதே வரிசையில் நடிகர் விஜய்யும் பயணித்துள்ளார். இந்த விழாவில் கலந்துகொண்டபோது அவரை சந்தித்த இந்த தகவலை மேடையில் பகிர்ந்துகொண்டார் சுனைனா.
“முதலில் மாஸ்க் அணிந்திருந்ததால் விஜய்யை அடையாளம் காண முடியவில்லை. பின்னர் அவரே மாஸ்க்கை கழட்டி ஹாய் சொன்னார். ஆச்சரியம் தாங்காமல் அவர் அருகில் இருந்த இருக்கையில் சென்று அமர்ந்தேன். என்ன விஷயமாக சென்னை செல்கிறீர்கள் என்று கேட்டவரிடம் லத்தி இசை வெளியீட்டுக்காக செல்கிறேன் என கூறினேன். அப்போது படம் குறித்தும் விஷால் குறித்தும் விசாரித்தவர், விஷாலுக்கு படப்பிடிப்பில் ஏற்பட்ட காயங்கள் குறித்தும் விசாரித்து தெரிந்து கொண்டார்: என்று கூறியுள்ளார். விஜய் நடித்த தெறி படத்தில் ஒரு சிறப்பு தோற்றத்தில் சுனைனா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.