என்மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி | அர்ஜுன் தாஸிற்கு பதிலாக ஆரவ் | உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு! | ராதே ஷ்யாம் இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | திடீரென்று ஹேர் ஸ்டைல் மாற்றிய எமி ஜாக்சன்! | திருமணம் பற்றிய செய்தி - வதந்தி என ‛லியோ' ஸ்டைலில் த்ரிஷா பதில் | 'விக்ரம், பிஎஸ் 2, ஜெயிலர்,' படங்கள் ஹிந்தியில் வரவேற்பு பெறாதது ஏன் ? | பாலிவுட்டில் தாக்கு பிடிப்பாரா ராஷ்மிகா? | பிரம்மானந்தம் கதை நாயகனாக நடிக்கும் 'கீடா கோலா' | கடற்கரை மணலால் கஷ்டப்பட்டேன்: பிரியதர்ஷினி அருணாசலம் |
ஷாலோம் ஸ்டுடியோஸ் சார்பில் ஜான்மேக்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சம்பவம் என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். இதில் ஸ்ரீகாந்த், நட்டி கதை நாயகர்களாக நடிக்க, கதை நாயகிகளாக பூர்ணா, ஸ்வேதா அவஸ்தி நடிக்கிறார்கள், முக்கிய கதாபாத்திரத்தில் ரங்கராஜ் பாண்டே நடிக்கிறார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சுந்தரா டிராவல்ஸ் படத்தின் நாயகி ராதா நடிக்கிறார்.
இவர்கள் தவிர இயக்குனர் ஏ.வெங்கடேஷ், ஜெயபிரகாஷ், கே.ராஜன், மகேந்திரகுமார் நாகர், சிங்கம்புலி, நாஞ்சில் சம்பத், விஜய் டிவி முல்லை கோதண்டம் மற்றும் பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் ரஞ்சித் குமார். இவர் இயக்குனர் ஏ.வெங்கடேஷிடம் இணை இயக்குனராக பணிபுரிந்தவர். ஒளிப்பதிவை இனியன் ஜே ஹாரிஸ் கவனிக்க அம்ரீஷ் இசை அமைக்கிறார்.
“உயிருக்கு போராடும் தனது மகளை காப்பாற்ற துடிக்கும் ஒரு தந்தையும், இந்த சமூகத்தால் பாதிக்கப்பட்ட ஒரு சாதாரண மனிதனும் சந்தர்ப்ப சூழ்நிலையால் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் போது நடைபெறும் சம்பவமே கதையின் மையக்கரு” என்கிறார் இயக்குனர் ரஞ்சித் குமார்.