ரத்தக்கண்ணீருக்கு புதிய அங்கீகாரம் | ஓடிடி டிரெண்டிங்கில் 'பகவந்த் கேசரி' | பொங்கல் போட்டி : டிரைலர்களில் முந்தும் 'ஜனநாயகன்' | எனக்கு யாரும் முழு சம்பளம் தந்ததில்லை: ரச்சிதா மகாலட்சுமி பேச்சு | 'திரெளபதி 2' பாடலில் சின்மயி குரல் நீக்கம்: இயக்குனர் பேட்டி | டிரைலரிலும் போட்டி போடும் 'பராசக்தி' | பிளாஷ்பேக்: தமிழ் படத்தில் நடித்த பிரேம் நசீர் மகன் | பிளாஷ்பேக்: நெகட்டிவ் ஹீரோவாக நடித்த சிவாஜி | ‛லொள்ளுசபா' வெங்கட்ராஜ் காலமானார்: நாளை வேளச்சேரியில் இறுதிசடங்கு | ‛என் தாய்மொழியை காக்க, பெரும் சேனை ஒன்று உண்டு': வெளியானது பராசக்தி டிரைலர் |

மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் திருச்சிற்றம்பலம் . நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கண்ணா, பாரதி ராஜா , பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு தனுஷ் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்ட் 18 ஆம் தேதி படம் வெளியாக உள்ளது . சமீபத்தில் இப்படத்தில் இருந்து தனுஷ் எழுதி பாடியிருந்த இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கிடையே வரவேற்பை பெற்றது . இந்நிலையில் திருச்சிற்றம்பலம் படத்தின் பிரமாண்ட இசைவெளியீட்டு விழா வருகின்ற ஜூலை 29ம் தேதி சென்னையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் நடைபெற இருக்கிறது . இந்த நிகழ்ச்சியில் தனுஷ் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவரும் கலந்துகொள்ள இருக்கிறார்கள் .




