நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? | பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! |

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 'சூரரைப் போற்று' திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி பல விருதுகளும் அங்கீகாரமும் பெற்றது. சமீபத்தில் ஆஸ்கர் விருதுக்கு கூட இந்தப் படம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் 2020-ம் ஆண்டிற்கான தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் 'சூரரைப் போற்று' திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்று அசத்தியுள்ளது. இந்நிலையில் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரை நடிகர் தனுஷ் வாழ்த்தி உள்ளார்.
தனுஷ் கூறுகையில், ‛‛தேசிய விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக சூர்யா சார் மற்றும் நண்பர் ஜி.வி.பிரகாஷிற்கு ஆகியோருக்கு... தமிழ் சினிமாவிற்கு இன்று பெரிய நாள். பெருமையாக உள்ளது'' என்றார்.