விரைவில் 'அயலான்' டீசர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | திருப்பதி ஏழுமலையானை தரிசித்த கீர்த்தி சுரேஷ் | ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய மாமன்னன் படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு | கங்குலி பயோபிக் சினிமாவாக உருவாகிறது | இயக்குனர் அவதாரம் எடுத்த கீர்த்தி சுரேஷின் சகோதரி | ஜெயிலர் படத்தின் அப்டேட் தந்த தமன்னா | லியோ படத்துடன் கேப்டன் மில்லர் மோதுமா? | மாவீரன் படத்தை கைப்பற்றிய லைகா | 'மல்லி பெல்லி' : சொந்தக் கதையில் நடித்துள்ள நரேஷ் - பவித்ரா | ஆர்.ஜே.ரவிக்கு ஆதரவாக பதிவிட்ட வெண்பா : சம்யுக்தா சொல்வது பொய்யா? |
சமூகத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து மீம்ஸ் போடும் வழக்கம் செல்போன் உருவான காலத்திலேயே தொடங்கி விட்டது. பல மீம்ஸ்கள் சமூகத்தில் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பிரச்சினைகளையும் ஏற்படுத்தி உள்ளது. மீம்ஸ் கிரியேட்டர் என்ற தனி தொழில்முறையே உருவாகி இருக்கிறது.
இதனை மையமாக வைத்து உருவாகி இருக்கும் வெப் தொடர்தான் மீம் பாய்ஸ். ராஜீவ் ராஜாராம் மற்றும் த்ரிஷ்யா கௌதா ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த தொடரை அருண் கௌஷிக் இயக்கியுள்ளார். குரு சோமசுந்தரம், படவா கோபி, ஆதித்யா பாஸ்கர், சித்தார்த் பாபு, ஜெயந்த், நம்ரிதா மற்றும் நிகில் நாயர் ஆகியோர் நடித்துள்ளனர்.
கல்லூரியின் அடக்குமுறை நிர்வாகத்தை எதிர்த்து 4 மாணவர்கள் நடத்தும் மீம்ஸ் வழி அறப்போராட்டம் தான் இந்த தொடரின் கதை. வருகிற 22 ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகிறது.