என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
பிரபல துணிக்கடை அதிபர் அருள் சரவணன் நடித்துள்ள படம் தி லெஜண்ட். ஊர்வசி ரவுட்டாலா, விஜயகுமார், பிரபு, விவேக், சுமன், நாசர், லிவிங்ஸ்டர்ன், யோகிபாபு, ரோபோ சங்க உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வருகிற 28ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் பிலிம்ஸ் அன்புசெழியன் பெற்றிருக்கிறார். கேரளாவில் மாநிலத்தில் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்ய உள்ளது. இந்தியா தவிர உலக நாடுகளின் வெளியீட்டு உரிமையை ஏபி இன்டர்நேஷனல் நிறுவனம் பெற்றிருக்கிறது.
இந்த நிலையில் தற்போது ஆந்திரா, தெலுங்கானா மாநில வெளியீட்டு உரிமத்தை ஸ்ரீலக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் பெற்றிருக்கிறது. உரிமையாளர் திருப்பதி பிரசாத்தும், தயாரிப்பாளரும் நடிகருமான அருள் சரவணனும் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். இதேபோல கன்னட வெளியீட்டு உரிமத்தை கே.செந்தில் என்பவர் பெற்றுள்ளார்.