நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் | 'வாரணாசி' முன்னோட்ட வரவேற்பு: ராஜமவுலியின் நன்றி | மீண்டும் தனுஷூடன் இணையும் சாய் பல்லவி! |

வீஜே பார்வதி இளைஞர்கள் மத்தியில் அதிகம் பிரபலமான செலிபிரேட்டியாக வலம் வருகிறார். யூ-டியூபில் ஆங்கராக வேலைபார்த்துக் கொண்டிருந்த அவர் சின்னத்திரையில் சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இன்று சினிமாவிலும் நடிக்க முயற்சித்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் அடிக்கடி எதாவது கருத்து வீடியோக்களையோ, டூர் வீடியோக்களையோ வெளியிட்டு வந்த அவர் தற்போது தனது பர்சனல் வாழ்க்கை பற்றி பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஜீ தமிழ் சேனலில் அண்மையில் நடைபெற்ற 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில் வீஜே பார்வதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு காதல் பற்றியும் பெண்களுக்கான கேரியர் மற்றும் கனவுகள் பற்றியும் பேசியிருந்தார். அந்த வீடியோவின் சிறு பகுதியை பதிவிட்டுள்ள பார்வதி, 'என்னை பொறுத்தவரை காதல் என்பது க்ரேட் பீலிங், கல்யாணம் என்பது பெரிய கமிட்மெண்ட். ஆனால், என் காதலனோ, கணவனோ என் வளர்ச்சிக்கு தடையாக இருப்பார் என்றால் எனக்கு அந்த காதலும், கமிட்மெண்ட்டும் தேவையே இல்லை' என மனம் திறந்து கூறியுள்ளார்.