குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
தமிழ் சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினியாக இருப்பவர் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இப்போதெல்லாம் சினிமாவில் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். தனுஷ் நடித்த 'பவர்பாண்டி' படத்தில் ஒரு சூப்பரான கேரக்டரில் நடித்திருந்த டிடி, தற்போது விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திவ்யதர்ஷினி கோலிவுட்டில் சிறப்பாக வலம் வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது அவர் அதையும் தாண்டி பாலிவுட்டுக்கே சென்றுவிட்டார். பாலிவுட்டின் பாட்ஷாவான சாருக்கான் நடிக்கும் ஜோஸ்வா படத்தில் டிடி நடித்துள்ளார். இதனையடுத்து ஷாருக்கானுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் வைரலாகி பரவலாக பேசப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாலிவுட்டின் மற்றொரு சூப்பர் ஸ்டாரான ரன்பீர் கபரூடன் சேர்ந்து டிடி புகைப்படங்களை எடுத்துள்ளார். அதில் டிடி, 'இது இன்று நடந்தது. இனி தமிழ் தொகுப்பாளர்களுக்கும் பாலிவுட்டின் கதவுகள் திறக்கும் என்று நம்புகிறேன். ஷம்ஷேரா புரோமோஷனுக்கு என்னை அழைத்த யாஷ் ராஜ் பிலிம்ஸூக்கு நன்றி' என தெரிவித்துள்ளார். தமிழிலிருந்து பாலிவுட்டிற்கு தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் என்ட்ரி கொடுத்திருக்கும் திவ்யதர்ஷினிக்கு பிரபலங்கள் உட்பட பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.