கதை நாயகியாக "யாஷிகா ஆனந்த்" நடிக்கும் “டாஸ்” | குஷி குழுவை சந்திப்பாரா விஜய் | பைரசியை விட இவர்களை பார்த்தால் பயமாக உள்ளது : பிரேம் குமார் | செப்டம்பர் இறுதி வார ஓடிடி ரிலீஸ்..... பெரிய லிஸ்ட் இருக்கு....! | நான் அப்படி சொல்லவில்லை : கல்யாணி பிரியதர்ஷன் | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு : அக்., 30ல் தீர்ப்பு | பிளாஷ்பேக் : தாணுவுக்காக கவுரவ தோற்றத்தில் தோன்றிய ரஜினி | ரஜினி, கமல் மாதிரி தனுஷ், சிம்பு இணைகிறார்களா? | தமிழ் படங்களை புறக்கணிக்கிறாரா? சாய்பல்லவிக்கு என்னாச்சு? | யுவன் சங்கர் ராஜா இசை சுற்றுப்பயணம் |
சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் வாடிவாசல் படத்தை தாணு தயாரித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தின் ஒத்திகை படப்பிடிப்பு சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பிற்க்காக சூர்யா காளை மாடுகளுடன் சிறப்பு பயிற்சிகளும் எடுத்து வந்தார் . மேலும் தமிழகத்தில் இருந்து மதுரை , திருநெல்வேலி , காங்கேயம் போன்ற பகுதிகளில் இருந்து காளை மாடுகளும் வரவைக்கப்பட்டு சில நாட்கள் படப்பிடிப்பும் நடத்தப்பட்டது. தற்போது இப்படத்திற்கு சூர்யா இடைவெளிவிட்டு பாலா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார் .
இந்நிலையில் ஜூலை 23ம் தேதி சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு வாடிவாசல் படத்தில் இருந்து ஸ்பெஷல் வீடியோ காட்சி ஒன்றை படக்குழுவினர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிவருகிறது. இந்த வீடியோ வாடிவாசலுக்காக நடைபெற்ற ஒத்திகை படப்பிடிப்பில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது .