'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? | ‛ஆன்டி' கதாபாத்திரம்: கொதித்த சிம்ரன் | பிடிகொடுக்காத நடிகரால் அதிருப்தியில் பிரமாண்ட இயக்குனர் |
மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டீசர்வெளியாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இந்த டீசரின் பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் பின்னணி இசைக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டு கிடைத்து வருகிறது. அதிலும் டீசரில் இடம் பெற்றுள்ள ஏ.ஆர். ரஹ்மானின் பின்னணி இசை பிரமாதமாக இருப்பதாக பலரும் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.
சோழர் காலத்து கதையில் உருவாகி இருப்பதால் அந்த காலகட்டத்தின் இசைக்கருவிகளை கடந்த இரண்டு ஆண்டுகளாக சேகரித்து அதற்கான பின்னணி இசையை ரகுமான் அமைத்திருப்பதாக படக்குழு ஒரு தகவல் வெளியிட்டுள்ளது. முக்கியமாக சோழர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட பம்பை, உடுக்கை, உருமி, தம்பட்டம், கொம்பு, பஞ்சமுக வாத்தியம் உள்பட பல இசைக்கருவிகளை இந்த படத்தின் பின்னணி இசையில் பயன்படுத்தியுள்ளார் ரகுமான். ஆனால் சோழர் காலத்தைச் சார்ந்த பல இசைக்கருவிகள் தமிழகத்தில் கிடைக்காத நிலையில் சில இசை கருவிகளை தாய்லாந்து நாட்டில் வாங்கி வந்து பின்னணி இசை அமைத்திருக்கிறார். இப்படி சோழர் காலத்தை திரை வடிவப்படுத்தி இருக்கும் மணிரத்னத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுக்க வேண்டும் என்பதற்காக அந்த காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக்கருவிகளை வாங்கி வந்து முழுக்க முழுக்க ஒரிஜினல் கருவிகளை வைத்தே பின்னணி இசை அமைத்திருக்கிறாராம் ஏ.ஆர்.ரகுமான்.