எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி | 2025 - வசூல் படங்களில் முதலிடத்தைப் பிடிக்குமா 'காந்தாரா சாப்டர் 1' ? | விஷால் - சுந்தர் சி கூட்டணி படத்தின் அறிவிப்பு… விரைவில்… | மனிஷாவுக்கு கை கொடுக்குமா 'மெஸன்ஜர்' | பிளாஷ்பேக் : 'ஷோலே' படத்தை தழுவி உருவான 'முரட்டு கரங்கள்' |
சென்னை: திடீர் உடல் நலக்குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விக்ரம்(56) நலமுடன் வீடு திரும்பினார்.
நடிகர் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன், கோப்ரா' உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. இதில், பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியிட்டு விழா, சென்னை வர்த்தக மையத்தில் நடந்தது. இந்நிலையில், நேற்று மதியம் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், கடும் காய்ச்சலால், சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் தகவல்கள் பரவின. ஆனால் இதை விக்ரமின் மேலாளர் மறுத்தார். விக்ரமிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவருக்கு மார்பு பகுதியில் லேசான அசவுகரியம் ஏற்பட்டது. சிகிச்சைக்கு பின் நலமாக உள்ளார் என்றார். தொடர்ந்து காவேரி மருத்துவமனையும் இதேப்போன்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
இந்நிலையில் விக்ரம் நலம் பெற்று இன்று(ஜூலை 9) மாலை வீடு திரும்பினார். திங்கள் அன்று அவர் நடித்துள்ள கோப்ரா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. இதில் அவர் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.