பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் நானே வருவேன் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு பெற்றது. தாணு தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் செல்வராகவன், இந்துஜா, யோகிபாபு, சுவீடவ் நாட்டை சேர்ந்த நடிகை எல்லி அவ்ராம் , பிரபு ஆகியோர் நடித்துள்ளனர் .
தற்போது இந்த படத்தின் தயாரிப்பு பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. டிரைலர் தயாராக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் சார்ந்தவர்கள் கூறுகிறார்கள் . மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரைக்கு வரஇருப்பதாக கூறப்படுகிறது . இது குறித்த அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகலாம். அன்றைய தினம் தான் மணிரத்னம் இயக்கி உள்ள பொன்னியின் செல்வன் படமும் வெளியாக உள்ளது.
தனுஷின் ஹாலிவுட் படமான தி க்ரே மேன் ஜூலை 22 ஆம் தேதியும், தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 18 ஆம் தேதியும் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.