தொடரும் பூரி ஜெகன்னாத், சார்மி தயாரிப்பு நட்பு : விஜய் சேதுபதி ஹீரோ | ஷங்கர் அடுத்து 'அவுட்டேட்டட்' பட்டியலில் இணைந்த ஏஆர் முருகதாஸ் | சர்தார் 2 - யுவனுக்குப் பதிலாக சாம் சிஎஸ் | எல் 2 எம்புரான் - 2 நிமிடக் காட்சிகள் நீக்கம் | தனுஷ், விக்னேஷ் ராஜா படத்தில் இணைந்த ஜெயராம்! | அஜித்தின் புது அவதாரம்: ஆதிக் பகிர்ந்த போட்டோ வைரல் | 'எல் 2 எம்புரான்' சர்ச்சை: மோகன்லால் புதிய பதிவு | வி.ஜே. சித்து இயக்கி நடிக்கும் புதிய படம்! | நானியுடன் இரண்டாவது முறையாக ஜோடி சேர்ந்த கீர்த்தி ஷெட்டி! | பார்க்கிங் பட தயாரிப்பாளருடன் இணையும் அர்ஜுன் தாஸ்! |
இந்திய சினிமாவில் இதற்கு முன்பு வெளிவந்த பான்-இந்தியா படங்களான 'பாகுபலி, ஆர்ஆர்ஆர், கேஜிஎப்' ஹீரோக்கள் செய்யாத சாதனையை 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஹீரோக்களில் ஒருவரான விக்ரம் செய்திருக்கிறார்.
தமிழில் தயாராகி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலுமே தனது சொந்தக் குரலில் டப்பிங் பேசியிருக்கிறார் விக்ரம். ஐந்து மொழி டீசர்களைப் பார்த்த பிறகு நமக்கு ஆச்சரியமும், வியப்பும் தான் அதிகமாகிறது. மொழி தான் வெவ்வேறே தவிர அந்த வசனங்களில் உள்ள உணர்ச்சிகளை தனது குரல் மூலம் அவ்வளவு அசத்தலாக வெளிப்படுத்தியிருக்கிறார் விக்ரம்.
தமிழில் இப்படி பல மொழிகளையும் தெரிந்த ஹீரோக்களில் ஒருவர் கமல்ஹாசன். அவருக்கு அடுத்து நடிப்புக்காக எந்த ஒரு எல்லை வரைக்கும் செல்லக் கூடியவர் விக்ரம் என்பது ரசிகர்களுக்கத் தெரியும். 'பொன்னியின் செல்வன்' படத்தின் ஐந்து மொழி டீசர்களிலும் உள்ள கமெண்ட்டுகளில் விக்ரமின் இந்த சொந்தக் குரல் டப்பிங் பற்றி பல ரசிகர்கள் பாராட்டுக்களைத் தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர்.