இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
இயக்கத்தில் ‛சிகரம்' என பெயர் எடுத்தவர் ‛தாதா சாகேப் பால்கே' விருது பெற்ற கே.பாலசந்தர். இவருடைய படங்கள் பெரும்பாலும் குடும்ப உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்னைகள் ஆகியவற்றை மையமாக வைத்து அதில் புதுமையை புகுத்தி பேச வைத்தவர் பாலசந்தர். ரஜினி, கமல் என இருபெரும் தலைகள் இன்று சினிமாவில் உச்சத்தை தொட்டுள்ளனர் அவர்களை சினிமாவில் செதுக்கியவர்களில் முக்கியமானவர் பாலசந்தர் என்றால் மிகையல்ல. இன்று அவரின் 93வது பிறந்தநாள். அவரைப்பற்றிய நினைவுகளை சற்றே திரும்பி பார்க்கலாம்...
1930 ஜூலை 9ம் தேதி அப்போதைய தஞ்சை மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி கிராமத்தில் சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார் கே.பாலசந்தர். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை நாடகங்களை நடத்தினார்.
12 வயதில் சினிமா மீது ஈர்ப்பு
அப்போதைய தமிழ் சினிமாவின் "சூப்பர் ஸ்டாராக விளங்கிய தியாகராஜ பாகவதரின் படங்களால் ஈர்க்கப்பட்டார். 12 வயதிலேயே சினிமா மற்றும் நாடகங்களுக்கு அடிக்கடி சென்றார். இதன் மூலம் அவர் மனதில் சினிமா ஆசை வளரத் தொடங்கியது. பின் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி., (விலங்கியல்) படிப்பில் சேர்ந்தார். கல்லூரியில் படிக்கும் போதும் கதை எழுதுவது, நாடகங்களில் நடிப்பது போன்ற திறமைகளை வளர்த்துக் கொண்டார். கல்லூரிகளில் விழா என்றால் அதில் பாலச்சந்தரின் நாடகம் கண்டிப்பாக இடம்பெறும். பள்ளிப்படிப்பை தனது சொந்த ஊரிலேயே முடித்த பாலசந்தர், 1949ல் பட்டப்படிப்பை முடித்ததும், முத்துப்பேட்டையில் உள்ள பள்ளியில் ஓராண்டு ஆசிரியராக பணியாற்றினார். அங்கும் மாணவர்களை வைத்து நாடகம் நடத்துவார்.
வேலை ஒரு பக்கம், நாடகம் இன்னொரு பக்கம்
1950ல் சென்னை வந்தார். அங்கு மத்திய அரசின் அக்கவுண்டண்ட் ஜென்ரல் அலுவலகத்தில் கிளார்க் பணியில் சேர்ந்தார். அங்கு இருக்கும்போதே கிடைக்கும் நேரத்தில் நாடக கம்பெனியில் சேர்ந்து நாடகம் இயக்கும் திறமையை வளர்த்துக்கொண்டார். ஆங்கிலத்தில் வெளியான "மேஜர் சந்திரகாந்த் என்ற நாடகத்தை தமிழில் மொழி பெயர்த்து இயக்கினார். இந்நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது. இதன் பின் நீர்க்குமிழி, சர்வர் சுந்தரம், மெழுகுவர்த்தி, நாணல், நவக்கிரகம் உள்ளிட்ட நாடகங்களையும் இயக்கினார்.
எம்ஜிஆரால் கிடைத்த வெளிச்சம்
இவர் முதலில் எழுதிய நாடகம் 'சினிமா விசிறி'. பாலசந்தரின் மற்றொரு நாடகமான 'மெழுகுவர்த்தி' என்ற நாடகத்திற்கு தலைமை தாங்கிய எம்ஜிஆர், பாலசந்தர் போன்ற இளைஞர்கள் திரைப்பட உலகிற்கு தேவை, அவர் ஆசைப்பட்டால் நானே அழைத்து செல்வேன் என்று சொன்னது மட்டுமல்லாமல் தன்னுடைய படமான 'தெய்வத்தாய்' படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தார். முதலில் தயங்கிய இவர், பின் சம்மதித்தார். இதன்பின் சர்வர் சுந்தரம் படத்துக்கு வசனம் எழுதினார்.
முதல்படம்
நடிகர் நாகேஷை முக்கிய கதாபாத்திரமாக கொண்டு எழுதிய நாடகம் 'நீர்க்குமிழி'. இந்த நாடகத்தை பார்த்த பிரபல இயக்குநர் வேலன், படமாக எடுக்க ஆசைப்பட்டு, பாலசந்தரை அணுகி, அவரையே திரைப்படத்தையும் இயக்குமாறு கேட்டுக்கொண்டார். யாரிடமும் உதவி இயக்குநராக பணிபுரியாத நம்மால் முதன் முறையாக ஒரு திரைப்படத்தை இயக்க முடியுமா என்ற அச்சம் ஒரு பக்கம் இருந்தாலும் சம்மதம் தெரிவித்து படத்தை இயக்கி வெற்றி கண்டார்.
100 படங்கள்
இவருடைய பெரும்பாலான படங்களில், குடும்ப உறவுகளுக்கு இடையேயான பிரச்னை, சமூகப் பிரச்னைகள் ஆகியவை மையக்கருத்தாக அமைந்தன. இதன் பின் பல படங்களை இயக்கினார். தொடர்ந்து 'நாணல்', 'பாமா விஜயம்', 'தாமரை', 'நெஞ்சம்' 'எதிர் நீச்சல்', 'பூவா தலையா', 'காவியத் தலைவி', 'எதிரொலி', 'பத்தாம் பசலி', 'நூற்றுக்கு நூறு', 'புன்னகை', 'வெள்ளி விழா', 'அரங்கேற்றம்', 'சொல்லத்தான் நினைக்கிறேன்', 'அவள் ஒரு தொடர்கதை', 'நான் அவனில்லை', 'மூன்று முடிச்சு' என்று 'பார்த்தாலே பரவசம்' வரை 100 படங்களை இயக்கி இமாலய சாதனை புரிந்து, 'இயக்குநர் இமயம்' என்ற அடைமொழியோடு உயர்ந்து நிற்கின்றார்.
கடந்த 2014ம் ஆண்டு டிச., 15ல் பாலசந்தர் மறைந்தார். இன்று அவர் நம்மோடு இல்லை என்றாலும் அவர் தந்த சினிமா படைப்புகள் காலத்திற்கும் பேசும்.
மேலும் கே.பாலசந்தர் பற்றிய பல சுவாரஸ்ய தகல்களை பெற அருகில் உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும் : https://cinema.dinamalar.com/balachander/