ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் | பாபி சிம்ஹாவை புறக்கணித்த தமிழ் ஹீரோக்கள் | எனக்கு ஜாதி பிடிக்காது : மேனனை உதறித் தள்ளிய சம்யுக்தா | 92வது வருடத்தில் தெலுங்கு சினிமா | 3வது முறை கிராமி விருது வென்று அசத்திய இந்திய இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் |
ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு நடிப்பில் பி. வாசு இயக்கிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தை விரைவில் தொடங்கப் போகிறார் பி. வாசு. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்க, வடிவேலு காமெடியாக நடிக்க போகிறார். இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகா வேடத்தில் நடிக்கப் போவது யார்? என்கிற கேள்விகள் தொடர்ந்து எழுந்து கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் ஆண்ட்ரியா அல்லது ராஷி கண்ணா இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், பிறகு திரிஷா நடிப்பார் என்று செய்திகள் வெளியாகின. தற்போது கும்கி உட்பட பல படங்களில் நடித்த லட்சுமி மேனன் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஜூலை 15 ஆம் தேதி முதல் மைசூரில் தொடங்க உள்ளது.