175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து வினோத் இயக்கும் தனது 61 வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் அஜித்குமார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். வங்கி கொள்ளையை மையமாகக் கொண்ட கதையில் உருவாகும் இந்த படத்தில் அஜித்குமார் இரண்டு வேடங்களில் நடிக்க, மலையாள நடிகை மஞ்சு வாரியார் நாயகியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பில் ஒரு மாதம் கலந்து கொண்ட அஜித்குமார், தற்போது ஐரோப்பா நாடுகளில் சுற்றுப்பயணத்தில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் அஜித் குமார் இடம்பெறாத மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வருகிறார் எச். வினோத். அந்த வகையில் சமுத்திரகனி தற்போது அஜித்தின் 61வது படப்பிடிப்பில் கலந்து கொண்டு வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் அஜித் 61வது படத்தின் பர்ஸ்ட் லுக் ஆகஸ்ட் 13ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ்க்கு இப்படம் திரைக்கு வருகிறது.