ரஜினி படத்தில் இணைந்தார் துஷாரா விஜயன் | அக்டோபர் 6ல் வெளியாகும் அயலான் பட டீசர் | ஓடிடியில் வெளியானாலும் 50 நாட்களைக் கடந்தும் ஓடும் 'ஜெயிலர்' | கடுமையாகும் 2024 பொங்கல் போட்டி | தமிழில் முதல் வெற்றியைப் பெற்ற கங்கனா ரணவத் | கமல் தொகுத்து வழங்க பிக்பாஸ் 7 துவங்கியது: 100 நாட்கள் தாக்குபிடிக்க போகும் போட்டியாளர் யார்? | விஜய்க்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி? | தணிக்கை சான்றிதழுக்கு அனுப்பப்பட்ட விஜய்யின் லியோ படம்! | இறைவன் படத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! | பகவந்த் கேசரி படத்தின் இரண்டாம் பாடல் அறிவிப்பு! |
‛காஞ்சனா 3' படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக நடித்தவர் நிக்கி தம்போலி. அதன்பிறகு தமிழில் இவருக்கு வாய்ப்பில்லை. பின்னர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். தற்போது ஹிந்தியில் ஓரிரு படங்களில் நடிக்கிறார். சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இயங்கும் இவர் தொடர்ந்து கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். கடந்தாண்டு கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட இவர் இப்போது மீண்டும் கொரோனா நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளார். இந்த முறை பாதிப்பு அதிகம் என்கிறார்.
நிக்கி தம்போலி கூறுகையில், ‛‛கடும் பாதிப்புடன் எனக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகி உள்ளது. என்னை நானே வீட்டில் தனிமைப்படுத்தி தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் உடன் சிகிச்சை பெறுகிறேன். சமீபத்தில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து மாஸ்க் அணியுங்கள், கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுங்கள்'' என தெரிவித்துள்ளார்.