தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் |
மலையாளத்தில் திரிஷ்யம் 2, டுவல்த் மேன் என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருகிறார் இயக்குனர் ஜீத்து ஜோசப். இதையடுத்து தற்போது மலையாள சினிமாவின் இளம் நடிகரான ஆசிப் அலி என்பவரை வைத்து கூமன் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.. இதை முடித்த கையுடன் அடுத்ததாக ஏற்கனவே மோகன்லாலை வைத்து இயக்கிய, கொரோனா தாக்கம் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ள ராம் படத்தின் படப்பிடிப்பை தொடங்குகிறார் ஜீத்து ஜோசப்.
இந்த நிலையில் பிரித்விராஜ் நடிக்கும் படமொன்றை ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது மலையாள இயக்குனர் சங்கமான பெப்கா. ஆம்... மலையாள இயக்குனர் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாக இருக்கிறது.
த்ரிஷ்யம் படம் இயக்குவதற்கு முன்னதாகவே பிரித்விராஜ் நடித்த மெமரீஸ் என்கிற சூப்பர் ஹிட் கிரைம் த்ரில்லர் படத்தை ஜீத்து ஜோசப் இயக்கியுள்ளார். தற்போது வெளியாகி வரும் த்ரில்லர் இன்வெஸ்டிகேஷன் படங்களுக்கு ஒரு வழிகாட்டி என்று கூட மெமரிஸ் படத்தை சொல்லலாம்.
அதையடுத்து கடந்த சில வருடங்களுக்கு முன் ஊழம் என்கிற படத்தில் இவர்கள் இருவரும் இணைந்து பணியாற்றினாலும் அந்த படம் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில் தான் இவர்கள் மூன்றாவது முறையாக இயக்குனர் சங்கத்திற்காக கூட்டணி சேர்ந்துள்ளனர்..