வங்க எழுத்தாளரின் 'ஆனந்தம் மடம்' நாவலைத் தழுவி தயாராகும் '1770' | பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனை கலாய்த்த ராஜூ : ஆடிஷனில் நடந்த சுவாரசியம் | சின்னத்திரை நட்சத்திரங்களின் ரீ-யூனியன் கொண்டாட்டம் | நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் |
கடந்த இரண்டு வருடங்களாக திரையுலகை பொறுத்தவரை கொரோனா தாக்கம் படப்பிடிப்பையும் படங்களின் வெளியீட்டையும் நிலைகுலையை வைத்தாலும் மலையாளத்தில் நடிகர் மோகன்லாலின் படங்கள் மட்டும் அடுத்தடுத்து ஓடிடி தளத்தில் வெளியாகி வந்தன. குறிப்பாக திரிஷ்யம்-2, ப்ரோ டாடி, சமீபத்தில் வெளியான டுவல்த் மேன் ஆகிய படங்கள் ஒடிடி தளத்தில் வெளியானாலும் ரசிகர்களின் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அவரது படங்களான மரைக்கார் மற்றும் ஆராட்டு ஆகிய படங்கள் தியேட்டர்களில் வெளியானாலும் வரவேற்பை பெறத் தவறின.
இந்தநிலையில் மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் அலோன். நீண்ட நாளைக்கு பிறகு இயக்குனர் ஷாஜி கைலாஷ் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ளார் என்பதால் இந்த படத்தை தியேட்டரில் பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் இந்த படமும் ஓடிடி தளத்தில் தான் வெளியாக இருக்கிறது என்று சமீபத்தில் ஒரு பேட்டியில் இயக்குனர் ஷாஜி கைலாஷ் கூறியுள்ளார். படத்தின் டைட்டிலுக்கு ஏற்றபடி இந்த படத்தில் மோகன்லால் ஒருவர் மட்டுமே நடித்திருக்கிறார் என்று சொல்லப்படுவதால் தியேட்டர்களில் இந்தப்படத்தை திரையிட்டால் பெரிய வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் ஓடிடி தளத்திலேயே வெளியிட முடிவு செய்துள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேசப்படுகிறது.