2 நாட்களில் ஐந்து மில்லியன் பார்வைகளை கடந்த திரிஷாவின் ‛தி ரோடு' டிரைலர்! | 'சந்திரமுகி 2' வெளியீடு தள்ளிப் போனது ஏன் ? | ஸ்கந்தா படத்திற்கு யு/ஏ சான்றிதழ்! | ஹாலிவுட் பட வாய்ப்பு - அட்லீ! | 7ஜி பிருந்தாவன் காலனி படத்தின் ரீ - ரிலீஸ் கலெக்ஷன் ரிப்போர்ட்! | கோட் சூட் லுக்கில் அஜித்தின் புதிய போட்டோ வைரல்! | வெப் தொடர் இயக்கும் ஸ்ரீ கணேஷ்! | சித்தா படத்தின் டிரைலரை வெளியிடும் சூர்யா! | ராஷ்மிகா மந்தனாவின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட அனிமல் படக்குழுவினர்! | சிரஞ்சீவி படத்தில் மூன்று கதாநாயகிகள்! |
பி. வாசு இயக்கத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, வடிவேலு உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் பி. வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், வடிவேலு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்நிலையில் இந்த படத்தில் ஜோதிகா நடித்த சந்திரமுகி வேடத்தில் நடிக்கப் போவது யார் என்ற கேள்விகள் எழுந்திருக்கிறது. அந்த வேடத்தில் ஆண்ட்ரியா அல்லது ராஷி கண்ணா இருவரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது அந்த வேடத்தில் நடிப்பதற்கு திரிஷாவிடம் பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜோதிகா நடித்த வேடத்தில் இப்போதைய நடிகைகளில் த்ரிஷாவினால் தான் ஸ்கோர் பண்ண முடியும் என்று படக்குழு கருதுவதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் வித்யாசாகர் இசையமைத்த நிலையில் இரண்டாம் பாகத்தில் எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.