ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் புதிய படம் ரத்தம். ஒரு மரணத்தைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு இப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இன்பினிடி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன், நந்திதா ஸ்வேதா மற்றும் மஹிமா நம்பியார் ஆகியோர் நடித்து வருகின்றனர் . முக்கிய கதாபாத்திரங்களில் ஜெகன், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ், சுந்தர் ஆகியோர் நடிக்கின்றனர் .
சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது . இந்நிலையில் இப்படத்தின் புரோமோஷனுக்காக பாடல் ஒன்று உருவாகி வருகிறது. இதற்கான படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. தெருக்குரல் அறிவு இந்த பாடலை எழுதியுள்ளார். கல்யாண் மாஸ்டர் நடனத்தில் இப்பாடல் உருவாகி வருகிறது. தற்போது இந்த பாடல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன .