திரு மாணிக்கம் படத்தை பார்த்து பாராட்டிய ரஜினிகாந்த் | அப்பாவுடன் மோதும் அதிதி ஷங்கர்! | விடாமுயற்சி பின்வாங்கியதால் பொங்கல் ரேஸில் குட் பேட் அக்லி களம் இறங்குகிறதா? | சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படத்தின் டைட்டில் லீக் ஆனது! | 200 கோடி லாபத்தை நெருங்கும் 'புஷ்பா 2' | சிறு பட்ஜெட் படங்கள் தான் வாழ்வியலை பேசும்: சங்ககிரி ராஜ்குமார் சொல்கிறார் | தமிழ் படத்தில் லண்டன் நடிகை | மீண்டும் வருகிறார் 'ஆரண்ய காண்டம்' யாஸ்மின் பொன்னப்பா | வணங்கானில் உண்மை சம்பவம்: பாலா | பிளாஷ்பேக்: இரண்டு ஹாலிவுட் படங்களை காப்பியடித்து எடுக்கப்பட்ட 'ராஜபார்வை' |
இந்தியத் திரையுலகத்தில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து, பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்கள், படங்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. கடந்த சில வருடங்களாக குறைவான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அவரது இசையில் ஒரு காலத்தில் ஒரே நாளில் பல படங்கள் வெளிவந்து, அவை அனைத்தும் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. அவரைப் போல இனி, தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவில் இசையமைக்க யாராவது வருவார்களா என்பது சந்தேகம் தான்.
கடந்த வாரம் ஜுன் 24ம் தேதி ஒரே நாளில் இளையராஜாவின் இசையில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு படம் 'மாயோன்', மற்றொன்று 'மாமனிதன்'. இதில் 'மாமனிதன்' படத்தில் தனது மகன் யுவன்ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து இசையமைத்துள்ளார்.
இளையராஜா இசையில் கடைசியாக 2016ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி 'அப்பா, ஒரு மெல்லிய கோடு' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்துள்ளன. அதற்கடுத்து ஆறு வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம்தான் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன.
இளையராஜா தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.