‛லால் சிங் சத்தா' படத்திற்கு எதிராக எழுந்த குரல் : வருத்தம் தெரிவித்த ஆமீர்கான் | திருமண ரத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பூர்ணா | சீரியல் நடிகை வினுஷா தேவி லேட்டஸ்ட் கிளிக்ஸ் | ரெங்கநாயகியாக மாறிய லயா : வைரலாகும் போட்டோஸ் | அநாகரீகமாக பேசிய நெட்டிசனை வச்சு செய்த சுனிதா | சீரியலிலிருந்து விலகிய மனிஷா ஜித் | பாரீஸ் சுற்றுலாவில் பிரியா பவானி சங்கர் | சமந்தாவை நேரில் சந்தித்தால்…. நாக சைதன்யா பதில் | ஆகஸ்ட்டில் மூன்று முக்கிய படங்கள் ரிலீஸ் | டிரணட் ஆகும் சிவன் பாடல் |
ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் பிரபாஸிற்கு சூப்பர் ஹிட்டாக அமைந்தன. அதன்பிறகு அவர் நடித்த சாஹோ, ராதேஷ்யாம் படங்கள் அதிர்ச்சி தோல்வியை கொடுத்தன. இந்த நிலையில் தற்போது ஆதிபுருஷ் படத்தில் நடித்து முடித்து விட்டவர், சலார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கி வருகிறார். சலார் படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். கேஜிஎப்- 2 படம் சூப்பர் ஹிட் அடித்திருப்பதால் சலார் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் பிருத்விராஜ் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்திய பிருத்விராஜ், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‛இது பிரபாஸ் படம் நோ சொல்ல முடியாது.. ஓகே சொல்லிட்டேன்' எனக் கூறியுள்ளார்.
மேலும், சலார் படத்தில் நடிக்க ஒரே ஒரு கண்டிஷன் மட்டும் போட்டுக் கொண்டேன் என்றும் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார். எத்தனை மொழிகளில் படத்தை வெளியிட்டாலும், அத்தனை மொழிகளிலும் சொந்த குரலிலேயே டப்பிங் பேசி விடுகிறேன். அது சுமராக இருந்தாலும், எத்தனை முறை பேச சொன்னாலும் பேசி நடிக்கிறேன் என சொன்னதும், பிரசாந்த் நீல் சிரித்து விட்டு நீங்க வந்தா மட்டும் போதும் எனக் கூறியிருக்கிறாராம்.