காதலி ஷீத்தலை பிரிந்த பப்லு! | துபாய் வீட்டில் கிருஷ்ண கீர்த்தனை நடத்திய ஏ.ஆர்.ரகுமான்! வைரலாகும் வீடியோ!! | 46 வயதாகும் ரெடின் கிங்ஸ்லி சீரியல் நடிகை சங்கீதாவை மணந்தார்! | அடுத்த ஆண்டு ஏப்ரலில் துப்பறிவாளன்-2 படப்பிடிப்பு தொடக்கம்! | கவின், எஸ்.ஜே.சூர்யா, பிரியங்கா மோகன் புதிய கூட்டணி! | சலார் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ்? | “மதிமாறன்” பர்ஸ்ட் லுக் வெளியீடு | டிவி நடிகர் சித்து நாயகனாக அறிமுகமாகும் 'அகோரி' | மீண்டும் சர்ச்சை: 'வாடிவாசல்' சூர்யா நடிப்பாரா அல்லது விலகுவாரா? | டிசம்பர் 15ல் 8 புதிய படங்கள் ரிலீஸ் |
கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் பாசில் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளியாகி வசூலை குவித்து வருகிறது. இந்த படத்தில் அனிருத் இசையில் கமல்ஹாசன் எழுதி பாடிய பத்தல பத்தல பாடலும் வைரலாக பரவியது. இந்த பாடலை பார்வையற்ற மாற்றத்திறனாளியான திருமூர்த்தி என்பவர் பாடி அந்த வீடியோவை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவும் வைரல் ஆனது. இந்த நிலையில் திருமூர்த்தியை தனது ஆழ்வார்பேட்டை அலுவலத்திற்கு அழைத்த கமல்ஹாசன் அவரை பாராட்டினார்.
அப்போது திருமூர்த்தி முறையாக இசை கற்று இசை கலைஞன் ஆக வேண்டும் என்கிற தனது ஆசையை கமலிடம் தெரிவித்தார். அப்போது கமல் ஏ.ஆர்.ரகுமானுடன் தொடர்பு கொண்டு அவரது கே.எம்.மியூசிக் அகாடமியில் திருமூர்த்திக்கு இசை பயிற்சி அளிக்குமாறும், அதற்கான செலவை தான் ஏற்பதாகவும் தெரிவித்தார். இதனை ஏ.ஆர்.ரஹ்மானும் ஏற்றுக் கொண்டார்.
விஸ்வாசம் படத்தில் இடம்பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி பலரின் கவனத்தை ஈர்த்தார் திருமூர்த்தி. அந்த படத்திற்கு இசையமைத்த இமான், தனது படங்களில் ஓரிரு பாடல்களை அவரை பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.