பாரதிராஜா மறைவிற்கு திரை பிரபலங்கள் இரங்கல் | ரஜினி, கமல் எனும் இரு சூப்பர் ஸ்டார்களை உருவாக்கிய பாரதிராஜா | பாரதிராஜா மறைவு; முதல்வர், திரையுலகினர் அஞ்சலி | தமிழ் சினிமாவை புரட்டி போட்ட பாரதிராஜா... | இயக்குனர் பாரதிராஜா காலமானார் | அனைவரும் மறந்து போன 'இந்தியன் 3' | ஜூன் 19ல் 'ஜில்லா, மெர்சல்' ரீ ரிலீஸ்: விஜய் ரசிகர்களுக்கு 'டபுள்' ட்ரீட் | இந்த மாதம் வெளியாகும் தனுஷ் 55 பட தலைப்பு, முதல் பார்வை | இரண்டு சூப்பர் படங்களை மிஸ் செய்த தேஜூ அஸ்வினி | வெனிஸ் நகரில் திருமண நாளைக் கொண்டாடிய நயன்தாரா, விக்னேஷ் சிவன் |

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான் படம் ‛சந்திரமுகி'. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க போவதாகவும், அதில் நாயகனாக ராகவா லாரன்ஸ் நடிப்பதாகவும் அறிவித்தார் பி.வாசு. படத்திற்கான முன் பணிகள் நடைபெற்று வந்தன. அதோடு மற்ற நடிகர்கள் தேர்வும் நடந்து வருகிறது. இந்த படத்தின் கதை சந்திரமுகி முதல் பாகம் படத்தின் தொடர்ச்சி கிடையாது. முற்றிலும் புதிய கதையில் தயாராகிறது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக கீரவாணி எனும் எம்எம்.மரகதமணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்கு சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான இவர் பாகுபலி 1, 2, ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். தமிழிலும் நீ பாதி நான் பாதி உள்ளிட்ட பல படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.