ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழில் பண்ணையாரும் பத்மினியும், ஒருநாள் கூத்து உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து ரசிகர்களிடம் கவனம் பெற்றவர் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். அடுத்தடுத்து பெரிய படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்ற இவர், விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட், பிரபாஸ் நடிப்பில் வெளியான ராதே ஷ்யாம் படங்களுக்கு இசையமைக்கும் அளவிற்கு உயர்ந்தார். சமீபத்தில் மலையாளத்தில் பஹத் பாஸில் நடிப்பில் வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் என்கிற படத்திற்கு இசையமைத்திருந்தார் ஜஸ்டின் பிரபாகரன்.
இந்த நிலையில் ஆஸ்கர் விருது பெற்ற இசையமைப்பாளர் கீரவாணி எனும் மரகதமணி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறும்போது வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் ஜஸ்டின் பிரபாகரன் தன்னை கவர்ந்ததாக கூறியுள்ளார். மேலும் விஜய் தேவரகொண்டா நடித்த டியர் காம்ரேட் என்கிற படத்தில் இடம்பெற்ற காதலே என்கிற பாடல் தன் மனதுக்கு மிக நெருக்கமான பாடல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அது மட்டுமல்ல சமீபத்தில் மலையாளத்தில் வெளியான பாச்சுவும் அற்புத விளக்கும் படத்திலும் ஜஸ்டின் பிரபாகரனின் இசை சிறப்பான பங்கு வகித்தது என்பது பற்றியும் குறிப்பிட்டுள்ளார். “மூத்த இசையமைப்பாளரும் மிகப்பெரிய ஜாம்பவானுமான உங்களிடம் இருந்து இப்படி ஒரு பாராட்டு கிடைப்பது என்னை மென்மேலும் சிறப்பாக பயணிக்க உத்வேகம் அளிக்கும் விதமாக இருக்கிறது” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் ஜஸ்டின் பிரபாகரன்.