ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தெலுங்கு திரையுலகின் பிரபல இசையமைப்பாளரும் இயக்குனர் ராஜமவுலியின் ஆஸ்தான இசையமைப்பாளருமான மரகதமணி, தமிழில் எம்.எம்.கீரவாணி என்கிற பெயரிலும் இசையமைத்து வருகிறார். கடந்த வருடம் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தில் இவரது இசையில் சூப்பர் ஹிட்டான நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த வருடம் ஆஸ்கர் விருது கிடைத்தது. இந்த நிலையில் ஒரு நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தற்போது சந்திரமுகி 2 மற்றும் ஜென்டில்மேன் 2 என இரண்டு சூப்பர்ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்களுக்கு இசையமைக்கிறார் மரகதமணி.
இதில் ஜென்டில்மேன் 2 படத்தின் பாடல் கம்போசிங் தற்போது கேரளாவில் கொச்சியில் உள்ள போல்காட்டி பேலஸில் நடைபெற்று வருகிறது. இதற்காக கேரளா வருகை தந்த இசையமைப்பாளர் மரகதமணி தான் வரும்போது தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோனுக்கென கையோடு நான்கு வரிகளில் ஒரு வாழ்த்துப் பாடலையும் உருவாக்கி எடுத்து வந்திருந்தார்.
கொச்சியில் தன்னை கே.டி.குஞ்சுமோன் வரவேற்றபோது கேரளாவில் உள்ள சில கோரஸ் இசைக்கலைஞர்களை வைத்து தான் கொண்டு வந்த பாடலை இசைக்க வைத்து தயாரிப்பாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் மரகதமணி.