ஒவ்வொரு முறையும் உங்களை தேர்வு செய்வேன் : நயன்தாரா | சிறப்பு தோற்றத்தில் நடிக்க டேவிட் வார்னருக்கு 2.5 கோடி சம்பளம் | 'பேடி' : ராம் சரணின் 16வது படத்தின் தலைப்பு | எல் 2 எம்புரான் - முதல் தகவல் அறிக்கை | வீர தீர சூரன் ரிலீஸில் ஏற்பட்ட சிக்கல் : மன்னிப்பு கேட்ட இயக்குனர் அருண் குமார் | 'டெஸ்ட்' படத்தில் எனது கேரக்டர் ராகுல் டிராவிட்டுக்கு சமர்ப்பணம் : சித்தார்த் | கண்ணப்பா படத்தை கிண்டல் செய்தால் சிவனின் கோபத்திற்கு ஆளாவீர்கள்: நடிகர் ரகு பாபு சாபம் | எனக்கும் காசநோய் பாதிப்பு இருந்தது : சுஹாசினி தகவல் | மம்முட்டிக்காக, மோகன்லால் பிரார்த்தனை செய்த தகவலை நாங்கள் வெளியிடவில்லை : தேவசம் போர்டு மறுப்பு | பிளாஷ்பேக்: வெளியான அனைத்து படங்களும் ஹிட்டான தீபாவளி |
90களில் பிரம்மாண்ட படங்களை தயாரித்து மெகா தயாரிப்பாளர் என அழைக்கப்பட்டவர் கே.டி குஞ்சுமோன். இயக்குனர் ஷங்கரை ஜென்டில்மேன் திரைப்படம் மூலமாக அறிமுகப்படுத்தியவர். சரத்குமார், ஏ.ஆர்.ரஹ்மான், கதிர், அப்பாஸ், வினீத் என பல கலைஞர்களின் ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர். தற்போது ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜென்டில்மேன்-2 படத்தின் மூலம் மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார். ஏ.கோகுல் கிருஷ்ணா இயக்கும் இந்த படத்திற்கு ஆஸ்கர் புகழ் கீரவாணி இசை அமைக்கிறார். இந்த படத்தின் துவக்க விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசும்போது கே.டி குஞ்சுமோன் யாரும் அறியாத தகவல் ஒன்றை வெளியிட்டார்.
அவர் பேசியதாவது: “பெரும்பாலும் பிரபலமான கலைஞர்களை வைத்து படம் எடுப்பதை விட வளரும் கலைஞர்களை வைத்து படம் எடுப்பது தான் என் டெக்னிக். ஜென்டில்மேன் துவங்கிய போது அந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும் என்று ஷங்கர் கூறினார். நானும் இளையராஜாவின் பக்தன் தான். ஆனாலும் அந்த சமயத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் வளர்ந்து வந்தார். ரோஜா படத்தின் மூலம் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். அதனால் அவரை வைத்து இசையமைக்கலாம் என்று கூறினேன். ஷங்கரும் அரை மனதாக ஒப்புக் கொண்டுதான் படத்தை இயக்கினார். ஆனால் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது” என்று கூறினார்.
தனது முதல் படத்திற்கு இளையராஜா தான் இசையமைக்க வேண்டும் என விரும்பிய ஷங்கர், ஜென்டில்மேன் படத்தின் பாடல்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பால், அதன்பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட நட்பால் தொடர்ந்து ஏ.ஆர் ரஹ்மானுடனேயே பயணிக்க ஆரம்பித்து விட்டதும் மீண்டும் இளையராஜா பக்கம் திரும்பியே பார்க்காததும் ஆச்சரியமான விஷயம் தான்.