ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
பிரபல இசையமைப்பாளர் மரகதமணி தெலுங்கில் கீரவாணி என்கிற பெயரிலும் தமிழில் மரகதமணி என்கிற பெயரிலும் இசை அமைத்து வருகிறார். குறிப்பாக இயக்குனர் ராஜமவுலியுடன் பல ஆண்டுகளாக தொடர்ந்து கூட்டணி அமைத்து பல ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார். கடந்தாண்டு இவரது இசையில் வெளியான ‛ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம் பெற்ற நாட்டுக்கூத்து பாடலுக்காக ஆஸ்கர் விருதையும் பெற்றார். இவரது மகன்களில் ஒருவரான ஸ்ரீசிம்ஹா இளம் கதாநாயகனாகவும், இன்னொரு மகன் காலபைரவா இசையமைப்பாளராகவும் வலம் வருகின்றனர்.
தற்போது இந்த சகோதரர்களின் கூட்டணியில் 'பாக் சாலே' என்கிற படம் வரும் ஜூலை 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரனீத் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தின் டிரைலரை சமீபத்தில் பார்த்துவிட்டு தனது பாராட்டுக்களை வெளிப்படுத்தியுள்ளார் சிரஞ்சீவி.
மேலும், “ஸ்ரீ சிம்ஹா தனது முதல் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமாகும் வரை அவர் மரகதமணியின் மகன் என்பதே எனக்கு தெரியாது.. அந்த அளவிற்கு தான் ஒரு பிரபலத்தின் மகன் என்பதை வெளிப்படுத்தாமல் தனது சொந்த முயற்சியில் முன்னேறி வருகிறார். அவரது சகோதரர் காலபைரவாவும் இந்த படத்திற்கு அருமையான இசையை கொடுத்துள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.