ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் தம்பி ராமையா நடிப்பில் வெளியாகி விமர்சன ரீதியாக பாராட்டுகளை பெற்ற படம் ‛வினோதய சித்தம்'. இந்த படத்தின் கதை தெலுங்கு முன்னணி நடிகர் பவன் கல்யாணுக்கு ரொம்பவே பிடித்துப் போனதால் சமுத்திரக்கனியையே தெலுங்கிலும் அந்த படத்தை ரீமேக் செய்ய சொல்லி விட்டார் அவரும் இளம் நடிகரான சாய் தரம் தேஜும் இணைந்து நடித்துள்ள இந்த படத்திற்கு ப்ரோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாதம் இந்த படம் வெளியாக இருக்கிறது.
படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் நாளை இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இன்னும் பவன் கல்யாண் தனது டப்பிங் பணிகள் துவங்கப்படவில்லை அதே சமயம் இந்த டீசருக்காக என நேரம் ஒதுக்கி அதில் இடம்பெற்ற தனது காட்சிகளுக்கு மட்டும் டப்பிங் பேசியுள்ளார் பவன் கல்யாண். டப்பிங் பேசும் சமயத்தில் அவருக்கு அதிக அளவில் காய்ச்சல் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் டப்பிங் பேசியுள்ளார் பவன் கல்யாண். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜனசேனா பார்ட்டி நடத்திய வாராஹி யாத்ராவில் அவர் கலந்து கொண்ட சமயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.