'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
சமீபத்தில் ஓம் இயக்கத்தில் பிரபாஸ், கீர்த்தி சனோன் நடிப்பில் வெளியான படம் ஆதிபுருஷ். மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு தங்களை திருப்திப்படுத்த தவறிவிட்டது என்றே ரசிகர்கள் பலரும் கூறி வருகின்றனர். இந்த படத்தில் ராமன், சீதா, ராவணன், லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகிய கதாபாத்திரங்கள் தான் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டன. அதேசமயம் துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்தவர்கள் பெரிய அளவில் வெளியே தெரியவில்லை. அப்படி ஒருவர்தான் இந்த படத்தில் அங்கதன் கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் மனோகர் பாண்டே.
இவர் இதற்கு முன்னதாக சூப்பர் 30 மற்றும் கங்குபாய் கத்தியவாடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ஆதிபுருஷ் படத்தை தொடர்ந்து தற்போது மலையாளத்தில் மம்முட்டி நடித்து வரும் கண்ணூர் ஸ்குவாட் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மனோகர் பாண்டே. இந்த படத்தில் மம்முட்டியின் போலீஸ் குழுவினருக்கு சில முக்கியமான குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் விதமாக தகவல் கொடுத்து உதவும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறாராம் மனோகர் பாண்டே.