Advertisement

சிறப்புச்செய்திகள்

ராம நவமியை முன்னிட்டு 'ஆதி புருஷ்' பட புதிய போஸ்டர் வெளியீடு | 200 சவரன் நகை கொள்ளை - புதிய புகார் அளித்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்! | மணிரத்னத்தின் மீதான வழக்கு தள்ளுபடி | ஸ்கை டைவிங்கில் அசத்திய அஞ்சு குரியன் | பிரதமரை சந்தித்த ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்பட குழுவினர் | சமந்தா நடிப்பில் இருந்து ஓய்வு எடுக்கிறாரா? | மதுபான பிசினஸில் இறங்கிய ஷாரூக்கான் மகன் ஆரியன்கான்! | பொன்னியின் செல்வன் வெற்றியை தொடர்ந்து மருதநாயகத்தை தூசி தட்டும் கமல் | எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்து சொன்ன அஜித்குமார் | தீண்டாமை பிரச்னையா : தியேட்டர் நிர்வாகம் விளக்கம் ; ஊழியர்கள் மீது வழக்குபதிவு |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருப்பதி மாடவீதியில் செருப்பு அணிந்த சர்ச்சை : மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்

11 ஜூன், 2022 - 13:38 IST
எழுத்தின் அளவு:
Vignesh-shivan-says-apology-to-Thirumala-temple-regarding-photoshoot-contraversy

6 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாய் சுற்றி வந்த நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் ஜோடி நேற்று முன்தினம் திருமணம் செய்து கொண்டனர். மகாபலிபுரத்தில் ஒரு ஹோட்டலில் மிக பிரம்மாண்டமாக நடந்த இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாரூக்கான் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

திருமணம் ஆன மறுநாளே நேற்று திருப்பதியில் இருவரும் வழிபாடு நடத்தி உள்ளனர். பட்டு - வேஷ்டி சட்டையில் விக்னேஷ் சிவனும், மஞ்சள் நிற பட்டுப்புடவையில் நயன்தாரா என இருவரும் பாரம்பரிய உடையை அணிந்து வந்து வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கோயில் வளாகத்தில் போட்டோ ஷூட்டும் இந்த ஜோடி எடுத்துள்ளனர். அப்போது நயன்தாரா காலில் செருப்பு அணிந்துள்ளார். கோயிலின் நான்கு மாட வீதியில் செருப்பு அணியக்கூடாது என கோயில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதை இவர்கள் மீறியதால் இந்த விஷயம் சர்ச்சையானது.

இந்த விவகாரத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தங்களது செயலுக்காக மன்னிப்பு கோரி உள்ளார் விக்னேஷ் சிவன்.

இதுதொடர்பாக திருப்பதி கோயில் அதிகாரிகளுக்கு அவர் எழுதி உள்ள மன்னிப்பு கடிதத்தில் கூறியிருப்பதாவது : ‛‛திருமணம் முடிந்த மறுநாள் வீட்டிற்கு கூட செல்லாமல் நேராக திருப்பதி தேவஸ்தானம் கோயிலுக்கு வந்து கல்யாண உற்சவத்தில் கலந்து கொண்டோம். பின்னர் போட்டோஷூட் எடுக்கும் போது அவசரம் காரணமாக நானும், நயன்தாராவும் அணிந்திருந்ததை உணரவில்லை. கடவுளை எந்த அவமரியாதையும் செய்யவில்லை. எனினும் எங்களது செயலால் பக்தர்கள் மனம் புண்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement
+2 மாணவர்களே! என்ன படித்தால் சிறந்த எதிர்காலம்?
தினமலர் வழிகாட்டி 2023 அனுமதி இலவசம்
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
புது வீட்டிற்கு குடி போகும் விக்கி - நயன்தாராபுது வீட்டிற்கு குடி போகும் விக்கி - ... விக்ராந்த் நடிக்கும் 'தீபாவளி போனஸ்' பட ப்ர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வடிவேலு விக்ராந்த் நடிக்கும் 'தீபாவளி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

Mohan - Thanjavur ,இந்தியா
12 ஜூன், 2022 - 07:48 Report Abuse
Mohan இந்த பதிவு, அவர்களின் செருப்புக்காகவா, அவர்களின் பொறுப்புக்காகவா, அவர்களின் வயது மூப்பிற்க்காகவா.
Rate this:
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
12 ஜூன், 2022 - 06:41 Report Abuse
D.Ambujavalli பிரபலங்கள் எல்லா விதிமீறலையும் செய்துவிட்டு ஒரு சாரி கேட்டு கதையை முடிப்பர் வெயில் கொடுமை என்று பச்சைப்பிள்ளை செருப்புடன் வந்தால் என்னென்ன நடக்கும் என்பது தெரியும்தானே
Rate this:
Narayanan - chennai,இந்தியா
11 ஜூன், 2022 - 19:07 Report Abuse
Narayanan செருப்பு அணிந்து செயல்பட்டதிற்கு வருந்துகிறேன் என்றால் சரி . அது என்ன அடுத்தவர் மனம் புண்பட்டிருந்தால் . நாம் செய்த தவறுக்கு மன்னிப்பு கூறுவதே சிறந்தது .
Rate this:
தமிழன் - கோவை,இந்தியா
11 ஜூன், 2022 - 17:26 Report Abuse
தமிழன் பெரும்பாலான கூத்தாடிகளின் அந்தரங்க வாழ்க்கையில் அசிங்கம் இருக்கும்..இவள் வெளிஉலகத்திற்கு தெரிந்து 3 பேரை காதல் எனும் வேசம்போட்டு எல்லாம் முடித்துவிட்டு இப்போது இந்த தியாகியை திருமணம் செய்து இருக்கிறாள்... பெரும்பாலான கூத்தாடிகளுக்கு வெட்கம் மானம் மரியாதை தெரியாது..இவர்கள் கால் பட்ட இடமெல்லாம் அசிங்கத்தை ஏதோனும் ஒரு வகையில் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்..
Rate this:
Srprd -  ( Posted via: Dinamalar Android App )
11 ஜூன், 2022 - 15:38 Report Abuse
Srprd They have shown complete disrespect and disregard for the TTDs rules. Who allowed them a photoshoot near the Mada Streets? Is the Sacred Mada veethi a place for photo shoot? How can they treat it so casually ? Totally condemn the disrespect shown.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mayan
  • மாயன்
  • நடிகர் : வினோத் மோகன்
  • நடிகை : பிந்து மாதவி
  • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
  Tamil New Film Devadas
  • தேவதாஸ்
  • நடிகர் : உமாபதி
  • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
  • இயக்குனர் :மகேஷ்.ரா
  Tamil New Film Tamilarasan
  • தமிழரசன்
  • நடிகர் : விஜய் ஆண்டனி
  • நடிகை : ரம்யா நம்பீசன்
  • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
  Tamil New Film Yang Mang Chang
  • எங் மங் சங்
  • நடிகர் : பிரபுதேவா
  • நடிகை : லட்சுமி மேனன்
  • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
  dinamalar-advertisement-tariff

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in