நெகட்டிவ் கதாபாத்திரத்தில் ‛கேஜிஎப்' நாயகி | 100 கோடி கொடுத்தாலும் சஞ்சய் லீலா பன்சாலியுடன் பணியாற்ற மாட்டேன் : இசையமைப்பாளர் இஸ்மாயில் தர்பார் | தொடர்ந்து 'டார்கெட்' செய்யப்படும் பிரியங்கா மோகன் | 25 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய 1 ரூபாய் அட்வான்ஸ் | சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூ இயர்' பாடலை படமாக்கிய மூத்த ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு |
தமிழில் வெளியாகும் பல படங்கள் கேரளாவில் மலையாளத்தில் டப்பிங் ஆகாமல் தமிழிலேயே வெளியாகி வசூல் சாதனை படைத்துள்ளன. கேரளாவைப் பொறுத்தவரையில் தற்போது விஜய் நடிக்கும் படங்களுக்குத்தான் வரவேற்பு அதிகமாக இருக்கும்.
இதற்கு முன்பு வெளியான தமிழ்ப் படங்களில் விஜய் நடித்த 'பிகில், மெர்சல், தெறி' படங்களும், ரஜினிகாந்த் நடித்த '2.0, கபாலி' படங்களும், விக்ரம் நடித்த 'ஐ' படமும் 15 கோடிக்கும் அதிகமான வசூலைப் பெற்றுள்ளன. அந்தப் படங்களின் சாதனைகளை தற்போது கமல்ஹாசன் நடித்து வெளிவந்த 'விக்ரம்' படம் முறியடித்துள்ளது.
நான்கு நாட்களில் கேரளாவில் சுமார் 20 கோடிக்கும் அதிகமான வசூலை 'விக்ரம்' படம் பெற்றுள்ளது. எப்படியும் 30 கோடி வசூலைத் தாண்டும் என்று சொல்கிறார்கள். இப்படத்தில் மலையாளத்தில் பல வருடங்களாகத் தெரிந்த நடிகரான கமல்ஹாசன் உடன், மலையாள நடிகரான பகத் பாசில் இருப்பதுதான் இப்படியான வசூலுக்குக் காரணம் என்கிறது மல்லுவுட்.
ரஜினிகாந்த், விஜய், விக்ரமைக் காட்டிலும் மலையாளத்தில் 40 வருடங்களுக்கு முன்பு சில பல வெற்றிப் படங்களில் நடித்த கமல்ஹாசன் படம் தற்போது நம்பர் 1 சாதனையைப் படைத்திருப்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.